தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புயல் முன்னெச்சரிக்கையாக படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

புயல் முன்னெச்சரிக்கையாக படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

புயல் முன்னெச்சரிக்கையாக படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்


ADDED : நவ 27, 2024 07:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 07:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை, : புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரையோர மீனவர்கள், கடலுக்கு செல்லாமல், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரையோர கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், சி.புதுப்பேட்டை, பரங்கிப்பேட்டை, சின்னுார், கிள்ளை, முடசல் ஓடை, கூழையார், பட்டரையடி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன் பிடித்துவிட்டு வந்து பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மற்றும் கிள்ளை முடசல் ஓடை மீன்பிடி இறங்கு தளத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாநில வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில், அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையெடுத்து, பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பகுதி மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இதனால், தங்கள் விசைப்படகுகள், மோட்டார் படகுகளை கிள்ளை முடசல் ஓடை மீன் இறங்குதளம் மற்றும் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில், பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கனரக வாகனங்கள் மூலம் மீன் ஏற்றுமதி செய்யப்படாததால், எப்போதும் பிசியாக காணப்படும் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை மீன் பிடி இறங்கு தளங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us