/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கொதிகலன் சூடேற்று விழா
/
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கொதிகலன் சூடேற்று விழா
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கொதிகலன் சூடேற்று விழா
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கொதிகலன் சூடேற்று விழா
ADDED : டிச 17, 2024 06:41 AM
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு 2024-2025ம் ஆண்டு ஆலை அரவைக்கான துவக்கமாக கொதிகலன் சூடேற்று விழா நடந்தது.
ஆலை தலைமை பொறியாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். அலுவலக மேலாளர் ஜெய்சங்கர், கணக்கு அலுவலர் ரமேஷ்பாபு, துணைத் தலைமை பொறியாளர் ரவிக்குமார், ராஜதுரை, சிவில் பொறியாளர் முருகன், பா.ம.க.. தலைவர் தேவதாஸ்படையாண்டவர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மதியழகன, சேரலாதன், ஆண்டவர்செல்வம், விவசாய சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தலைமை கரும்பு அலுவலர் ரவிக்கிருஷ்ணன் வரவேற்றார்.
விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள், ஆலையின் அதிகாரிகள், ஊழியர்கள், கரும்பு பயிரிடுவோர், பல்வேறு அரசியில் கட்சியினர் கலந்து கொண்டனர்.