ADDED : மார் 25, 2026 11:03 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் தலைமை தபால்நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நிபுணர்கள் மோப்பநாயுடன் சோதனை மேற்கொண்டனர்.
கடலுார் தலைமை தபால்நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம் இரண்டு ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. அதில் வெடிகுண்டு உள்ளதாக மண்டல அலுவலகத்திற்கு மெயில் சென்றது.
இதையடுத்து நேற்று மாலை 3:00 மணிக்கு கடலுார் தலைமை தபால்நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடக்டர் மற்றும் மோப்பநாயுடன் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து மிரட்டல் வெறும் புரளி எனத்தெரிந்தது.
