/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்கல்
/
சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்கல்
ADDED : ஏப் 04, 2025 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கோவன்ஸ் நுரையீரல் சிகிச்சை மையம் சார்பில், சிறைக் கைதிகளுக்கு புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புத்தக திருவிழா நடந்தன.
விழாவில், தமிழக முதல்வரின் கூண்டுக்குள் வானம் சிறைவாசிகளுக்கு புத்தகம் தானம் செய்வீர் என்ற திட்டத்தின் கீழ் கடலுார் கோவன்ஸ் நுரையீரல் சிகிச்சை மைய நிறுவனர் டாக்டர் கலைக்கோவன், சிறைக் கைதிகளுக்காக 20,000 ரூபாய் மதிப்பில் 120 புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், டி.ஆர்.ஓ.,ராஜசேகரன், சிறைத்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர் ஜெயமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

