ADDED : ஜன 26, 2026 03:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: சென்னையில் நடந்த புத்தக திருவிழாவில், மாநகராட்சி ஓய்வூதியர் சங்க கவுரவ தலைவர் எழுதிய நுால் வெளியிடப்பட்டது.
சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் அரசு புத்தக திருவிழா நடந்தது.
இதில், தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்கத்தின் கடலுார் கவுரவ தலைவர் குமாரசாமி மூன்றாவதாக எழுதிய 'வாழ்வாங்கு வாழ அருமையான 100 கருத்துக்கள்' என்ற தலைப்பிலான நுால் வெளியிடப்பட்டது.
விழாவில், அமைச்சர் நாசர் கலந்து கொண்டு நுாலை வெளியிட, நுாலாசிரியரின் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.
நுாலாசிரியர் குமாரசாமிக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ், பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

