sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

150 ஊராட்சிகளில் புத்தக வாசிப்பு திட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல் கலெக்டர் தகவல்

/

150 ஊராட்சிகளில் புத்தக வாசிப்பு திட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல் கலெக்டர் தகவல்

150 ஊராட்சிகளில் புத்தக வாசிப்பு திட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல் கலெக்டர் தகவல்

150 ஊராட்சிகளில் புத்தக வாசிப்பு திட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல் கலெக்டர் தகவல்


ADDED : நவ 08, 2025 01:55 AM

Google News

ADDED : நவ 08, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், 150 ஊராட்சிகளில் வாசிப்போம் உயர்வோம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கடலுார் அடுத்த வரக்கால்பட்டு ஊராட்சியில் உள்ள கிராமப்புற நுாலகத்தில் 'வாசிப்போம் உயர்வோம்' திட்டத்தின் வாயிலாக பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்திட நடைபெறும் வகுப்பினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆய்வு செய்தார்.

இதையடுத்து அவர் கூறியதாவது:

பள்ளி மாணவ, மாணவி யர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை துாண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாகிட வேண்டும் என்பதற்காகவும் கிராமப்புற நுாலகங்களின் வாயிலாக கடலுார் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், 150 ஊராட்சிகளில் வாசிப்போம் உயர்வோம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 4 முதல் 8ம் வகுப்பு மாணவ,மாணவியர்கள் நுாலகத்திற்கு சென்று புத்தகங்களை வாசித்து வருகின்றனர்.

கிராம நுாலகத்தில் மாணவர்கள் பள்ளிப்படிப்புடன் பொது அறிவு சார்ந்த நீதி கதைகள் சார்ந்த புத்தகங்களையும் படித்து பயனடைகின்றனர். வாசிப்போம் உயர்வோம் திட்டத்தில் வளரிளம் பருவ பள்ளி மாணவர்களின் புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்திடவும், அதனை ஊக்குவித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

' இரத்த சோகையில்லா கடலுார்' முன் முயற்சி திட்டத்தில் மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள செவி லியர் பயிற்சி பள்ளியில் ரத்தசோகையினால் பாதிப்படைந்த மாணவர்களின் ஊட்டசத்து விகிதம் முன்னேற்றம் குறித்தும், ரத்த அளவினை அதிகரித்திட பயிற்சி மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின் போது பயிற்சி கலெக்டர் மாலதி, இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மணிமேகலை, சுகாதார அலுவலர் பொற்கொடி, கல்வி அலுவலர் ஞானசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us