/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொத்தட்டை ஊராட்சியில் பூத் கமிட்டி கூட்டம்
/
கொத்தட்டை ஊராட்சியில் பூத் கமிட்டி கூட்டம்
ADDED : டிச 04, 2024 10:37 PM

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சியில் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பெரியகுமட்டி, சின்னகுமட்டி, வேளங்கிப்பட்டு ஆகிய மூன்று வாக்குச்சாவடிகளுக்கு பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி வரவேற்றார். கூட்டத்தில், பாண்டியன் எம்.எல்.ஏ., பேசினார்.
மாவட்ட தொழில் நுட்ப பொருளாளர் சாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர், புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், கிளை செயலாளர்கள் சிவராஜ், சம்பத், கணேசன், சுப்ரமணியன், மகேஷ், கோவிந்தராஜ், வெங்கடேசன், பாஸ்கர், உலகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.