/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை
/
மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை
ADDED : நவ 04, 2024 05:22 AM
புவனகிரி : புவனகிரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாக குடிமகன்கள் புலம்புகின்றனர்.
புவனகிரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் மற்றும் பிராந்தி குவாட்டர் பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 முதல் 20 வரை, பாட்டில் தரத்திற்கு ஏற்ப வசூலிப்பதாக குடிமகன்கள் புலம்புகின்றனர்.
சம்பந்தப்பட்டவர்கள் திடீர் ஆய்வு செய்து அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் வசூல் பணம் செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அனைத்து நேரங்களில் மது விற்பனைக்காக, குறைந்த விலையில் உள்ள மது பாட்டில்களை சிலர் கள்ளத்தனமாக விற்பனை செய்ய வாங்கி செல்லவதாக புகார் எழுந்துள்ளது.
எனவே அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.