/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உதவித்தொகை கேட்டு சிறுவன், சிறுமி மனு
/
உதவித்தொகை கேட்டு சிறுவன், சிறுமி மனு
ADDED : ஜன 20, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகை கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் சிறுவன், சிறுமி மனு அளித்தனர்.
நெய்வேலியை சேர்ந்த ரமேஷ் மகன் மோகித், 11; நான்காம் வகுப்பு படித்து வரும் இவர், தனது தங்கை மற்றும் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு;
எனக்கு தாய், தந்தை ஆகிய இரண்டு பேரும் இறந்து விட்டனர். அதனால் எனது தாய் வழி பாட்டி வீட்டில், எனது சகோதரியுடன் வசித்து வருகிறேன்.
எனது பாட்டியும் வயதானவர். எனவே பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கிடைக்கும் உதவித்தொகை எனக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

