ADDED : பிப் 03, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில், திருமண மண்டபத்தில் நகை திருட முயன்ற 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று திருமணம் நடந்தது. அந்த மண்டபத்திற்கு வந்த 17 வயது சிறுவன் நகை திருட முயன்றுள்ளார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் சிறுவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், சிறுவன் கருவேப்பிலங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் என்பதும், கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி, அதே மண்டபத்தில் 4 கிராம் தங்க காசை திருடிச் சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சிறுவனை கைது செய்தனர்.