ADDED : மே 27, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்தார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த ஆயிப்பேட்டையைச் சேர்ந்தவர் தமிழரசன் மகன் நிஷாந்தன், 5; தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். சிறுவன் நேற்று மாலை 4:30 மணிக்கு வீட்டின் மொட்டை மாடியில் விளை யாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, மேலே செல்லும் மின்கம்பி மீது கை உரசியதால் மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டான். சத்தம் கேட்டு திடுக்கிட்ட அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு ஒரத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், செல்லும் வழியில் சிறுவன் இறந்தான். புகாரின் பேரில், ஒரத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.