தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பட்டாசு வெடித்து சிறுவன் காயம்

பட்டாசு வெடித்து சிறுவன் காயம்

பட்டாசு வெடித்து சிறுவன் காயம்


ADDED : ஆக 16, 2025 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2025 03:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இரங்கல் ஊர்வலத்தில் சிதறி கிடந்த பட்டாசுகளை கையில் எடுத்த போது, திடீரென வெடித்து சிதறியதால் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம், வயலுாரை சேர்ந்தவர் பாண்டியன் மகன் யாதவ்ஸ்ரீ, 10; நகராட்சி துவக்கப் பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கிறார்.

இவரது வீட்டின் வழியாக நேற்று மாலை 5:00 மணிக்கு இரங்கல் ஊர்வலத்தில் சிலர் பட்டாசு வெடித்தனர். அதில், சிதறி கிடந்த பட்டாசுகளை சிறுவன் விளையாட்டாக கையில் எடுத்தபோது திடீரென வெடித்துச் சிதறியது.

அதில், இடது கையில் படுகாயடைந்த சிறுவனை பெற்றோர் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரது கையில் 8 தையல்கள் போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளார். விருத்தாசலம் போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us