ADDED : பிப் 25, 2026 05:08 AM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு பிராமணர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவச்சவா இல்லத்தில் நடந்தது.
சங்க கவுரவ தலைவர் சீனிவாச நாராயணன் தலைமை தாங்கினார். நிர்வாகி தோத்தாச்சாரி வரவேற்றார். நிகழ்ச்சியில் சங்க வளர்ச்சி மற்றும் கோவில் பராமரிப்பு குறித்து பேசினர்.
வரும் பராபவ ஆண்டு சுத்த வாக்கிய பஞ்சாங்கம் வழங்கப்பட்டது. சங்க தலைவர் சாமா கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் சீனிவாசாச்சாரி, நிர்வாகிகள் ரவி, அருளழகன், கணேஷ், பாலு, குரு, மகளிர் அணி விஜி, கமலா, வித்யா, ஜெயா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், காட்டுமன்னார்கோவில் பெருமாள் கோவில் குளம் வேத புஷ்கரணி, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், அதனை துார்வாரி சுத்தம் செய்து நான்கு கரைகளையும் பலப்படுத்தி பயன்பாட்டிற்கு விட வேண்டும்; அதிக மதிப்பெண் பெற்ற பிராமணர் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; உயர் கல்வி படிப்புக்கு உதவி செய்ய வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
