தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்  

 தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்  

 தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்  


ADDED : ஏப் 23, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 07:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் சித்திரை பிரமோற்சவம், கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

இந்தாண்டு சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை ஸ்ரீதேவி, பூ தேவியுடன் தேவநாத சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

பின், மங்கள வாத்தியத்துடன் கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 26ம் தேதி வேணுகோபாலன் சேவையில் தங்க விமானத்திலும், தங்க பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும் வீதியுலா நடக்கிறது.

வரும், மே 1ம் தேதி முக்கிய நிகழ்வாக திருத்தேர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us