/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்
/
கடலுார் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்
ADDED : ஆக 29, 2025 03:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் காலை உணவு திட்டத்தை மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி துவக்கப் பள்ளியில் கவுன்சிலர் அருள்பாபு துவக்கி வைத்தார்.
மிழகத்தில் 3வது கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி நாயுடு துவக்கப்பள்ளியில் நேற்று முன்தினம் முதல் துவக்கி வைக்கப்பட்டது.
அப்பகுதி கவுன்சிலர் அருள்பாபு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு உணவு வழங்கி துவக்கி வைத்தார். அருகில் தலைமை ஆசிரியை கலாவதி, உதவி ஆசிரியை மேரி விமலிரோசி, சுஜாதா, ராஜலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

