தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காலை உணவு திட்டம் துவக்கம்

 காலை உணவு திட்டம் துவக்கம்

 காலை உணவு திட்டம் துவக்கம்


ADDED : பிப் 16, 2026 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 07:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் துவக்க விழா நடந்தது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்ட விரிவாக்கத்தை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, கடலுார் டவுன் ஹாலில் மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'கடலுார் மாநகராட்சியில் 623 பேருக்கு காலை உணவு திட்டம் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. துாய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நலவாரியம் மூலம் விபத்து காப்பீடு திட்டம், இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை என, பல உதவித் தொகை வழங்கப்படுகிறது,' என கூறினார் .

விழாவில், ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர கமிஷனர் முஜிபூர் ரஹ்மான் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us