/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருத்துவமனை கண்ணாடி உடைப்பு: வாலிபர் கைது
/
மருத்துவமனை கண்ணாடி உடைப்பு: வாலிபர் கைது
ADDED : டிச 23, 2024 11:17 PM
திட்டக்குடி; திட்டக்குடி அரசு மருத்துவமனையில் கட்டு கட்டும் அறை கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த முடிகண்டநல்லுாரைச் சேர்ந்த பாக்கியராஜ் மனைவி அனிதா, 38. இவர் தனது தாய் வீடான திட்டக்குடி அடுத்த கோழியூருக்கு வந்தபோது, நேற்று முன்தினம் தனது சகோதரர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையை அனிதா தடுத்தார். அப்போது அவரின் தலையில் காயம் ஏற்பட்டது.
இதையறிந்த அனிதாவின் தம்பி அர்ஜூன், 35, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அப்போது அக்காவிற்கு சரியாக மருத்துவம் பார்க்கவில்லை எனக்கூறி, கட்டு கட்டும் அறை கதவின் கண்ணாடியை உடைத்ததார். இதுகுறித்து புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து, அர்ஜூனனை கைது செய்தனர்.