ADDED : நவ 06, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: கோவில் பூட்டை உடைத்து பித்தளை பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசா ர் தேடி வருகின்றனர்.
பெண்ணாடம் அடுத்த சின்னகொசப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே அய்யனார், வீரனார் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல பூஜை முடித்து கோவிலை பூட்டி விட்டு பூசாரி விநாயகமூர்த்தி வீட்டிற்கு சென்றார்.
நேற்று காலை 10:00 மணியளவில் வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பித்தளை மணி 1, தட்டு, 1, பொங்கல் வைக்கும் பாத்திரம் மற்றும் 500 ரூபாய் திருடுபோனது தெரிந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

