/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மார்பக புற்று நோய் விழிப்புணர்வு ஊர்வலம்
/
மார்பக புற்று நோய் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : அக் 25, 2024 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நகர்ப்புற நல வாழ்வு மையம் சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கடலுார் டவுன்ஹால் முன் நடந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் கமிஷனர் அனு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஊர்வலம் பாரதி சாலை வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில், மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் மற்றும் கல்லுாரி மாணவியர் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், டாக்டர் அபிநயா பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.