/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலத்தில் குழாய்கள் அடைப்பால் வலுவிழக்கும் அபாயம்
/
பாலத்தில் குழாய்கள் அடைப்பால் வலுவிழக்கும் அபாயம்
ADDED : மார் 28, 2025 05:27 AM

நடுவீரப்பட்டு; நரிமேடு கெடிலம் ஆற்று பாலத்தின் தண்ணீர் ஓடும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் ஓடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடுவீரப்பட்டு அடுத்த நரிமேடு-இடையர்குப்பம் செல்லும் வழியில் கெடிலம் ஆற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தரைபாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தில் கடந்த மழைகாலத்தில் பெய்த மழையில் அடித்து வரப்பட்ட மரக்கிளைகள் மற்றும் கழிவுகள் குழாய்களில் அடைத்துக்கொண்டுள்ளன. இதனால் மழைகாலத்தில் மழைநீர் ஓடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுபோன்று பல பாலத்தின் அடிபகுதி துார்ந்து, பாலங்கள் வலுவிழந்து வருகின்றன.
எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலத்தின் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.