ADDED : ஜூலை 02, 2026 02:58 AM
அ நிறம் | அளவு
கிள்ளை: தம்பியை தாக்கிய, அண்ணணை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம், நற்கரவந்தன்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள்செல்வன்,33; இவரது, சகோதரர் வினோத், 36; இருவருக்கும் சொத்து பிரச்னை உள்ளது.
கடந்த மாதம்,15 ம் தேதி அருள்செல்வன் வீட்டில் இருந்த மின் மோட்டாரை, வினோத் கழற்றி எடுத்து சென்றதால், மீண்டும் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.
அப்போது, வினோத், அருள்செல்வத்தை தாக்கி, மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, அருள்செல்வன் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப்பதிந்து, வினோத்தை, 36; கைது செய்தனர்.
