UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:54 PM
காட்டுமன்னார்கோவில்: முன்விரோதத்தில் தொழிலாளியை தாக்கிய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த மா.புளியங்குடியைச் சேர்ந்த ராமசாமி மகன் அன்பரசன் 35; கூலித்தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர்கள் வரதராஜன் மகன் கமல் 45; விமல் 43; இருவரும் சகோதரர்கள். அன்பரசனுக்கும், கமலுக்கு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
நேற்று முன்தினம் அன்பரசன், ஊர் மெயின் ரோட்டில் உள்ள மளிகைக் கடைக்கு சென்று சிகரெட் வாங்கினார். அப்போது அங்கு வந்த கமல், அன்பரசனை ஆபாசமாக ஆபாசமாக திட்டினார். அதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அதில் ஆத்திரமடைந்த கமல் மற்றும் தம்பி விமல் இருவரும் சேர்ந்து கட்டையால் அன்பரசனை தாக்கினர்.
இது குறித்து அன்பரசன் கொடுத்த புகாரின் பேரில் குமராட்சி போலீசார் வழக்கு பதிந்து, கமல், விமல் ஆகியோரை கைது செய்தனர்.
