தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சகோதரதர்கள் தீக்குளிக்க முயற்சி 

 சகோதரதர்கள் தீக்குளிக்க முயற்சி 

 சகோதரதர்கள் தீக்குளிக்க முயற்சி 


ADDED : ஏப் 11, 2026 10:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 10:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் சகோதரர்கள் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு போரட்டம் செய்தனர்.

கடலுார் மாவட்டம், புவனகிரி தனியார் நிதி நிறுவனத்தில் அதே பகுதி விக்னேஷ் நகரைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 28; மற்றும் அவரது சகோதரர் சம்பத்குமார், 25; இருவரும் ரூ. 1 லட்சம் கடன் பெற்றனர். அதற்கு மாத தவணையாக ரூ.5438 செலுத்தி வந்தனர்.

மார்ச் மற்றும் ஏப்ரல் இரு மாத தவணை செலுத்தவில்லை. இது குறித்து தனியார் நிறுவன ஊழியர்கள், சந்தோஷ்குமார் வீட்டிற்கு சென்று நிலுவை தவணை தொகை கேட்டபோது, வாக்குவதாம் ஏற்பட்டது. இதனை கண்டித்து சகோதரர்கள் இருவரும், தங்கள் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, புவனகிரி-குறிஞ்சிப்பாடி சாலையில் தீக்குளிக்க முயன்றதுடன், சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். புவனகிரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி எச்சரித்து அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us