ADDED : ஆக 22, 2025 09:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே அண்ணனைக் காணவில்லை என தம்பி, அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த வேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவ ர் உதயகுமார், 43; இவர் கடந்த ஏப்ரல் 29ம் தேதி விருத்தாசலம் பஸ் நிலையம் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த அவரது தம்பி இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.