/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி போனஸ் சலுகை அறிவிப்பு
/
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி போனஸ் சலுகை அறிவிப்பு
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி போனஸ் சலுகை அறிவிப்பு
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி போனஸ் சலுகை அறிவிப்பு
ADDED : அக் 15, 2025 11:17 PM
கடலுார்: பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி போனஸ் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலுார் மாவட்ட பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பி.எஸ்.என்.எல்., தன் வாடிக்கையாளர்களுக்காக 2 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவை தமிழகத்தில் இ.சிம் சேவையின் தொடக்கம், தீபாவளி போனஸ் சிறப்பு சலுகை ஆகியவையாகும். தமிழகத்தில் பி.எஸ்.என்.எல், இ.சிம் சேவை தொடக்கம் - புதிய டிஜிட்டல் முன்னேற்றம் பி.எஸ்.என்.எல்., இ.சிம் சேவையை, இ.சிம் வசதி கொண்ட புதிய மற்றும் என்.என்.பி., வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் தேவைப்படும் பழைய வாடிக்கையாளர்களும் தங்களின் இணைப்பை இ.சிம்., ஆக மாற்றிக்கொள்ளலாம்.
இச்சேவை வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப அனுபவத்தையும், பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான மொபைல் இணைப்பையும் வழங்குகிறது. உடனடி செயல்படுத்தல், நெகிழ்வான மற்றும் குறைந்த செலவினானது, தனி சிம் தேவையில்லை. மேம்பாட்டு பாதுகாப்பு போன்ற வசதிகள் கிடைக்கும்.
பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்காக சிறப்பான தீபாவளி போனஸ் சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி புதிய எம். என்.பி., வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக சிம் விலை ரூபாய் ஒன்று மட்டுமே. இந்த சலுகை விலை சிம்கார்டு 15ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை கிடைக்கும். என்று கூறப்பட்டுள்ளது.