/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பி.எஸ்.என்.எல்., தொலைதொடர்பு ஆலோசனைக்குழு கூட்டம்
/
பி.எஸ்.என்.எல்., தொலைதொடர்பு ஆலோசனைக்குழு கூட்டம்
பி.எஸ்.என்.எல்., தொலைதொடர்பு ஆலோசனைக்குழு கூட்டம்
பி.எஸ்.என்.எல்., தொலைதொடர்பு ஆலோசனைக்குழு கூட்டம்
ADDED : ஜன 22, 2026 06:59 AM

கடலுார்: பி.எஸ்.என்.எல்., கடலுார் தொலைபேசி ஆலோசனைக்குழு கூட்டம், கடலுார் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் நடந்தது.
ஆலோசனைக்குழு கூட்டத்திற்கு கடலுார் விஷ்ணுபிரசாத் எம்.பி., தலைமை தாங்கினா ர்.
விழுப்புரம் ரவிக்குமார் எம்.பி., கள்ளக்குறிச்சி மலையரசன் எம்.பி., முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு சேவைகளின் மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை தரம், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் தொலை தொடர்பு வசதிகளை விரிவுபடுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், கடலுார் தொலை தொடர்பு வணிக பகுதி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று ஆலோசனைகளை தெரிவித்தனர். பி.எஸ்.என்.எல்., கடலுார் மாவட்ட பொதுமேலாளர் பாலச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

