தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

 மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

 மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்


ADDED : பிப் 13, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மணல் கடத்திய மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் கொளஞ்சி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றபோது, வி.குமாரமங்கலம் மணிமுக்தாறு அணைக்கட்டு பகுதியில் ஆற்று மணல் ஏற்றி வந்த மூன்று மாட்டு வண்டிகளை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது, மாட்டு வண்டிகளை ஓட்டிவந்த மூவர் தப்பியோடினர். விசாரணையில், அவர்கள், சாத்தமங்கலம் முருகவேல் மகன் வேல்மணி, அரசகுழி தனபால் மகன் ராஜா, முத்துக்கண்ணு மகன் அன்பழகன் என்பது தெரிந்தது. அவர்கள் மீது கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, மூன்று மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us