ADDED : ஜூன் 07, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் மணல் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்த மாட்டு வண்டிகள் மக்கி வீணாகி வருகிறது.கடலுார் மாநகரில் செல்லும் தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் நடக்கிறது.
இந்த மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டு வண்டிகளை போலீசார் வழக்கு பதிந்து பறிமுதல் செய்து வருகின்றனர். கடலுார் மஞ்சக்குப்பம் எஸ்.பி., அலுவலகம் அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் இந்த மாட்டு வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாட்டு வண்டிகள் தற்போது மக்கி வீணாகி வருகிறது. எனவே, வழக்குகளை விரைந்து முடித்து, மாட்டு வண்டிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.