ADDED : செப் 06, 2026 08:34 PM

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் போதை பொருட்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இளைஞர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதை பொருட்கள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சில்வர் பீச்சில் ‘பன் ஸ்ட்ரீட்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையொட்டி ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், கல்லுாரி மாணவ, மாணவிகள் சில்வர் பீச்சில் நேற்று மாலை குவிந்தனர்.
தொடர்ந்து, எஸ்.பி., விவேகானந்த சுக்லா தலைமையில் அனைவரும் போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழி்ப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் கிஷன்குமார், டி.எஸ்.பி., தமிழ் இனியன் உட்பட பலர் பங்கேற்றனர். சினிமா பாடல்களுக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் மொபைல் போனில் உள்ள டார்ச் லைட் அடித்த படி ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
