/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக் மீது பஸ் மோதி இன்ஜி., பட்டதாரி பலி
/
பைக் மீது பஸ் மோதி இன்ஜி., பட்டதாரி பலி
ADDED : ஜன 19, 2025 06:24 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே அரசு பஸ் மோதி, பைக்கில் சென்ற பொறியியல் பட்டதாரி உயிரிழந்தார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் மணக்காடு மேற்கு தெருவை சேர்ந்தபுஷ்பநாதன் மகன் புகழேந்தி, 31; பொறியியல் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. புகழேந்தி நேற்று முன்தினம், பைக்கில் காட்டுமன்னார்கோவில் சென்றுவிட்டு இரவு 10:00 மணியளவில் சேத்தியாத்தோப்பு திரும்பினார். அள்ளூர் நான்கு முனை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது பாளையங்கோட்டையிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. விபத்தில், புகழேந்தியின் தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

