/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ்கள் மோதல் எதிரொலி : விபத்து இடத்தில் பேரிகார்டு
/
பஸ்கள் மோதல் எதிரொலி : விபத்து இடத்தில் பேரிகார்டு
பஸ்கள் மோதல் எதிரொலி : விபத்து இடத்தில் பேரிகார்டு
பஸ்கள் மோதல் எதிரொலி : விபத்து இடத்தில் பேரிகார்டு
ADDED : ஏப் 12, 2025 02:55 AM

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே தனியார் பஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து நடந்த இடத்தில், மீண்டும் விபத்து ஏற்படாத வகையில் போலீசார் சார்பில் பேரி கார்டு வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கம் மேம்பாலம் அருகே, கடலுாரில் இருந்து குள்ளஞ்சாவடி செல்வதற்கு வந்த தனியார் பஸ் மீது, அரசு விரைவு பஸ் மோதி நேற்று முன் தினம் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் படுகாயமடைந்து, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து ஏற்பட காரணமான தனியார் பேருந்து, கீழ்பூவாணிக்குப்பம் பாலம் சென்று திரும்பி, வந்து குள்ளஞ்சாவடி செல்ல வேண்டும். இதற்கு 2 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். எனவே நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில்,தனியார் பேருந்து ஆலப்பாக்கம் பாலத்தில் இருந்து இறங்கி, இடது புறமாக உடனடியாக திரும்பியதால் பின்னால் வந்த அரசு விரைவு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
எனவே, விபத்தை தடுக்கும் வகையில், விழுப்புரம்-நாகை சாலையில் ஆலப்பாக்கம் மேம்பாலம் இறங்கும் இடத்தின் இருபுறமும், போலீசார் பேரிகார்டு வைத்துள்ளனர்.