/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்; நெல்லிக்குப்பத்தில் 10 பேர் படுகாயம்
/
பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்; நெல்லிக்குப்பத்தில் 10 பேர் படுகாயம்
பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்; நெல்லிக்குப்பத்தில் 10 பேர் படுகாயம்
பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்; நெல்லிக்குப்பத்தில் 10 பேர் படுகாயம்
ADDED : நவ 06, 2024 11:14 PM

நெல்லிக்குப்பம் ; நெல்லிக்குப்பம் அருகே பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
கடலுாரில் இருந்து நேற்று மாலை எம்.சாண்ட் ஏற்றிய லாரி ஒன்று நெல்லிக்குப்பம் நோக்கி வந்தது. பூலோகநாதர் கோவில் அருகே வந்தபோது, எதிரே பண்ருட்டியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து, லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
அப்போது, அந்த வழியாக ஸ்கூட்டியில் சென்ற கணவர் மனைவி இருவர் பஸ்ஸின் அடியில் சிக்கினர். பஸ் மற்றும் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது.இ ந்த விபத்தில் ஸ்கூட்டியில் சென்ற நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த மதிவாணன்,58 அவரது மனைவி ராஜலட்சுமி, 50; மற்றும் லாரி டிரைவர் குமார்,50. பஸ்ஸில் பயணம் செய்த கவிதா, 40, பாலமுருகன்,45 உள்ளிட்ட 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தால் கடலூர் பண்ருட்டி சாலையில் மாலை 5:00 முதல் 5:30 மணி வரை போக்குவரத்து பாதித்தது.
நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விபத்து ஏற்பட்ட வாகனங்களை அப்புறபடுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்துக்குள்ளான இதே பஸ், கடந்த 6 மாதத்துக்கு முன் மேல்பட்டாம்பாக்கத்தில் எதிரே வந்த பஸ் மீது மோதிய விபத்தில் 8 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அதிகாரிகள் அலட்சியம்
கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பும் தனியார் பஸ்கள், தலைமை தபால் நிலையம் வரையில் 10 நிமிடங்களுக்கு மேல் நின்று பயணிகளை ஏற்றுகின்றனர். அதேபோல் பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பும் பஸ்கள் ஒன்றிய அலுவலகம் வரை 10 நிமிடங்களுக்கு மேல் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.
இந்த நேரத்தை சரி செய்ய பஸ்களை வேகமாக ஓட்டுகின்றனர்.
கடலூரில் இருந்து பண்ருட்டி வரை சாலையும் நன்றாக இருப்பதால் அதிவேகமாக செல்கின்றனர்.
6 மாதத்துக்கு முன் மேல்பட்டாம்பாக்கத்தில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி கொண்டு விபத்து நடந்த பிறகு 10 நாட்களுக்கு மட்டும் போக்குவரத்து துறையினர் பஸ்களை நிறுத்தாமல் அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு கண்டு கொள்ளாததால் இதுபோன்ற விபத்துகள் நடக்கிறது.