ADDED : ஏப் 23, 2025 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலம், திட்டக்குடி தாலுகா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
விருத்தாசலத்தில் நடந்த கூட்டத்தில், மாவட்ட செயலர் தேசிங்குராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கணேசமூர்த்தி, மாநில ஆலோசனை குழு உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். தாலுகா சங்க தலைவர் குமார் வரவேற்றார்.
சங்க செயலர் பாலமுருகன் பேசினார். மாவட்ட துணை செயலாளர் அன்சார் அலி, மாவட்ட கவுன்சில் உறுப்பினர்கள் சரோஜா, வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அரசு போக்குவரத்து துறையில், தற்காலிக ஊழியர் பணி எடுப்பதை ஒழுங்குப்படுத்த வேண்டும். அரசு பஸ் இயக்கத்தினை சரியாக ஒழுங்குப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

