/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'பார்க்கிங்' இடமான பஸ் ஸ்டாண்டு; நெல்லிக்குப்பத்தில் அவலம்
/
'பார்க்கிங்' இடமான பஸ் ஸ்டாண்டு; நெல்லிக்குப்பத்தில் அவலம்
'பார்க்கிங்' இடமான பஸ் ஸ்டாண்டு; நெல்லிக்குப்பத்தில் அவலம்
'பார்க்கிங்' இடமான பஸ் ஸ்டாண்டு; நெல்லிக்குப்பத்தில் அவலம்
ADDED : மே 27, 2025 11:18 PM

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சி பஸ் ஸ்டாண்டு வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் ஒரு சில பஸ்கள் மட்டுமே உள்ளே சென்று வந்தன. மற்ற பஸ்கள் உள்ளே செல்லாமல் வெளியே நின்று செல்கின்றன. இதனால் ரூ. 1 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டு பயன்படாமலேயே உள்ளது.
நகராட்சியில் புதியதாக பொறுப்பேற்கும் கமிஷ்னர்கள் பஸ் ஸ்டாண்டை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம் என கூறுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால், இதுவரை எந்த அதிகாரியும் பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்
பஸ் நிலையம் செயல்படாவிட்டால் கூட நகராட்சி மூலம் பஸ்களில் கட்டணம் வசூலிப்பதை மட்டும் முறையாக செய்கிறார்கள்.
பாலுார்ட்டும் அறையும் மூடியே கிடக்கிறது. அதிகாரிகள் அலட்சியத்தால் பஸ் ஸ்டாண்டு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
பஸ்கள் உள்ளே வராமல் வழக்கம்போல் வெளியே நின்று செல்வதால் பஸ் ஸ்டாண்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் பஸ் ஸ்டாண்டு வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ள அவலம் அரங்கேறியுள்ளது.
எனவே, கலெக்டர் தலையிட்டு பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.