/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ் டயர் வெடித்து விபத்து: 4 பேர் காயம்
/
பஸ் டயர் வெடித்து விபத்து: 4 பேர் காயம்
ADDED : ஜன 10, 2024 12:05 AM
சிதம்பரம் : சிதம்பரத்தில் நள்ளிரவில் ஆம்னி பஸ் டயர் வெடித்து, தடுப்புக்கட்டையில் மோதியதால், 4 பேர் படுகாயமடைந்தனர்.
சிதம்பரத்தில் இருந்து நேற்று அதிகாலை 1:00 மணியளவில், ஆம்னி பஸ் பெங்களூருக்கு புறப்பட்டது. ஜெயச்சந்திரன் என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார். சிதம்பரத்தில் இருந்து புவனகிரி சாலை வழியாக சென்றபோது, திடீரென பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடி அருகில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி நின்றது.
இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்தனர். பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, காயமடைந்த 4 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு, பயணிகளை அனுப்பி வைக்கப்பட்டனர்.

