நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்; வேப்பூர் அருகே மரவள்ளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பூர் அடுத்த கழுதுாரில் ஓடை அருகே மரத்தில் நேற்று பகல் 3:00 மணியளவில் ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வேப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் தற்கொலை செய்தவர், திருவண்ணாமலை மாவட்டம், குயிலம் பகுதியை சேர்ந்த முருகவேல், 40 என்பதும், மரவள்ளி கிழங்கு வியாபாரம் செய்து வந்ததும் தெரிந்தது. இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

