/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அன்போடு வாங்க ஆரோக்கியத்தோடு வாழ்க: எஸ்.எஸ்., ஆயில் மில் அழைப்பு
/
அன்போடு வாங்க ஆரோக்கியத்தோடு வாழ்க: எஸ்.எஸ்., ஆயில் மில் அழைப்பு
அன்போடு வாங்க ஆரோக்கியத்தோடு வாழ்க: எஸ்.எஸ்., ஆயில் மில் அழைப்பு
அன்போடு வாங்க ஆரோக்கியத்தோடு வாழ்க: எஸ்.எஸ்., ஆயில் மில் அழைப்பு
ADDED : அக் 26, 2024 06:36 AM

கடலுார் எஸ்.எஸ்., ஆயில் மில்லிற்கு அன்போடு வாங்க ஆரோக்கியத்தோடு வாழ்க என, கடை உரிமையாளர் ரவி கூறினார்.
அவர், கூறியதாவது: கடலுார், திருப்பாதிரிப்புலியூர், போடி செட்டித் தெருவில் எஸ்.எஸ்.ஆயில் மில்ஸ் (சகுந்தலா-சம்பந்தம் எண்ணெய் ஆலை) இயங்கி வருகிறது.
வாகை மரச் செக்கு எண்ணெய்யை கடலுாரில் முதன் முதலில் அறிமுகம் செய்தோம். ஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்ற இந்நிறுவனத்தில் எண்ணெய் வாங்க கடலுார், விழுப்புரம், புதுச்சேரி வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இங்கு, ரசாயன கலப்படமற்ற கடலை எண்ணெய், கருப்பட்டி நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தீபம் நல்ணெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், புங்கை எண்ணெய், சுத்தமான நெய், கடுகு எண்ணெய், பஞ்சதீப எண்ணெய், கருப்பட்டி (பனைவெல்லம்), பனங்கற்கண்டு, நாட்டு சக்கரை, இந்துப்பு, தினை, வரகு, குதிரைவாலி, சாமை, துவரம் பருப்பு, கடலை பருப்பு, குண்டு உளுந்து, பொட்டுக் கடலை, சிகப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுளி, பாசிப் பருப்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய் மற்றும் எள் உருண்டு கிடைக்கும்.
வீட்டு முறை தயாரிப்புகளான மஞ்சள் துாள், இட்லி பொடி, பருப்பு பொடி, வடவம், சத்து மாவு, கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, தனி மிளகாய் துாள், குழம்பு மிளகாய் துாள், வெட்டி வேர், மூலிகை தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்துப் பொருட்களும் தரமாகவும், குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் கிளைகள் கடலுார், மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை, முதுநகர் சங்கரன் தெருவில் உள்ளது. தீபாவளியை முன்னிட்டு வரும் 27ம் ஞாயிற்றுக்கிழமை முழுநேரம் கடை திறந்திருக்கும். தீபாவளியையொட்டி லிட்டருக்கு 5 முதல் 20 ரூபாய் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.