/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடியில் புறவழிச்சாலை திட்டப்பணி... கிடப்பில்: விரைந்து துவக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
திட்டக்குடியில் புறவழிச்சாலை திட்டப்பணி... கிடப்பில்: விரைந்து துவக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திட்டக்குடியில் புறவழிச்சாலை திட்டப்பணி... கிடப்பில்: விரைந்து துவக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திட்டக்குடியில் புறவழிச்சாலை திட்டப்பணி... கிடப்பில்: விரைந்து துவக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 23, 2025 11:25 PM

திட்டக்குடி: திட்டக்குடியில் போக்குவரத்து பாதிப்பை தவிர்க்க, கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை திட்டப் பணியை விரைந்து துவக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடலுார் - திருச்சி சாலை மார்க்கத்தில் திட்டக்கு டி முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட் ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில், எம்.எல்.ஏ., அலுவலகம், தாலுகா, நகராட்சி, சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.
அரசு, தனியார் பள்ளிகள், அரசு கல்லுாரி மற்றும் நுாற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் செயல்படுகிறது.
இந்த பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து திட்டக்குடியை மையமாக வைத்துதான் செல்கிறது.
கிராம பகுதிகளில் இருந்து வெளியூர்களில் வேலை பார்க்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள் தங்களின் பைக்குகளில் திட்டக்குடி வந்து அங்கிருந்து பஸ் மூலம் விருத்தாசலம், தொழுதுார், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கடலுார் உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இதன் காரணமாக காலை, மாலை நேரங்களில் வதிஷ்டபுரம், தாலுகா அலுவலகம், பஸ் நிலையம், கடைவீதி, அரசு பெண்கள் பள்ளி ஆகிய சாலை பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்து கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்துகளும் நாளுக்குநாள் தொடர்கிறது.
இந்த போக்குவரத்து பாதிப்பை போக்க திட் டக்குடியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதி பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று, கடந்த 2015ல் அப்போதைய அ.தி.மு.க., அரசு திட்டக்குடியில் புறவழிச்சாலை அமைக்க அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக கோழியூரில் இருந்து கீழ்ச்செருவாய் பஸ் நிறுத்தம் வரை 8 கிலோ மீட்டர் துாரத்திற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அரசு புறம்போக்கு, தனியார் நிலங்களில் நில அளவீடு பணிகளும் துவங்கியது. துவங்கிய ஓரிரு மாதங்களிலேயே பணிகளும் கிடப்பில் போடப்பட்டது.
ஆனால் அரசியல் கட்சியினர் அவ்வப்போது திட்டக்குடி புறவழிச்சாலை திட்டம் துவங்கப்படும் என பேசுவதோடு மட்டும் உள்ளனர்.
திட்டக்குடியில் போக்குவரத்து பாதிப்புகளும், விபத்துகளும் அடிக்கடி ஏற்படுவது இதுநாள் வரை தொடர்கிறது.
எனவே, திட்டக்குடியில் கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை திட்டப்பணியை விரைந்து துவக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அமைச்சரின் தனி கவனம் தேவை