ADDED : ஆக 03, 2011 10:04 PM
கடலூர் : விருத்தாசலம் அருகே இரு வீடுகளில் 81 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த புதுவிளாங்குளத்தைச் சேர்ந்தவர் ராமர் மனைவி மேகலாவதி 40;, இவர் தன் கூரை வீட்டை பூட்டிவிட்டு, வயலுக்குச் சென்றார். மாலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டிற்குள் வைத்திருந்த தோடு, மூக்குத்தி உட்பட 11 கிராம் நகை மற்றும் 38 ஆயிரம் பணம் திருடுபோனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து நகை திருடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர். அதே போல் விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரத்தைச் சேர்ந்தவர் அபூர்வசாமி மனைவி ரீட்டா ஆஞ்சலா 45, இவர் கடந்த 15ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் திரும்பியபோது ஓட்டை பிரித்துவிட்டு வீட்டிற்குள் புகுந்து டிவிடி பிளேயர், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் 35 ஆயிரம் பணத்தையும் மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது. மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.