நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டியில் விவசாயிகள் சங்கம் சார்பில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 119 ரூபாய் கூலி வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 119 ரூபாய் கூலி வழங்க வலியுறுத்தி நேற்று பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலர் ஏழுமலை தலைமை தாங்கினார். தலைவர் லாரன்ஸ், பொருளாளர் தணிகாசலம் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் துரைராஜ், வட்ட தலைவர் அமிர்தலிங்கம், செயலர் தனபால் உள்ளிட்டோர் பேசினர்.