/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடி அரசுப் பள்ளிகளில் சாலை விழிப்புணர்வு கூட்டம்
/
திட்டக்குடி அரசுப் பள்ளிகளில் சாலை விழிப்புணர்வு கூட்டம்
திட்டக்குடி அரசுப் பள்ளிகளில் சாலை விழிப்புணர்வு கூட்டம்
திட்டக்குடி அரசுப் பள்ளிகளில் சாலை விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஆக 11, 2011 10:58 PM
திட்டக்குடி : திட்டக்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் சாலை விதிகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். எஸ்.ஐ., ரவிச்சந்திரன், சம்மந்தம், கந்தசாமி, ராஜவேல் முன்னிலை வகித்தனர். உதவி தலைமைஆசிரியர் விஸ்வநாதன் வரவேற்றார். திட்டக்குடி இன்ஸ்பெக்டர் செல்வம் பேசியதாவது : பல நேரங்களில் அவசரம் காரணமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன. மாணவிகள் ஈவ்டீசிங் உட்பட வெளியே சொல்ல முடியாத தவறுகளை பள்ளி வளாகத்தில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் போட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகள் பள்ளி நேரங்களில் வெளியே சுற்றி வருவது குறித்து காவல்துறையினர் கண்டுபிடித்தால் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றார்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நன்றி கூறினார்.
இதேப் போல் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் ராஜன் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் மதிவாணன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் செல்வம் பேசுகையில், பள்ளி மாணவர்கள் சாலை விதிகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். திட்டக்குடியில் சிறப்புத் திட்டமாக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சமூக அக்கறையுடன் சமூக விரோதச் செயல்கள் குறித்த புகார்களை பெட்டியில் போடலாம். குழந்தைகள் வன்கொடுமை குறித்த குற்றங்களுக்கு 1099 என்ற இலவச எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்றார்.