/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காணாமல் போன மனைவி கணவரிடம் ஒப்படைப்பு
/
காணாமல் போன மனைவி கணவரிடம் ஒப்படைப்பு
ADDED : ஆக 11, 2011 10:58 PM
புவனகிரி : புவனகிரி அருகே காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து அவரது கணவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
புவனகிரி அடுத்த கீரப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமிபதி. இவரது மனைவி லட்சுமி, 31. மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் லட்”மி கோபித்துக் கொண்டு கடந்த மே மாதம் 7ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து லட்சுமிபதி கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே அவர் சென்னை பாடியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்வதை கண்டுபிடித்தனர். உடன் சப் இன்ஸ்பெக்டர் மணி, சென்னை சென்று லட்சுமியை அழைத்து வந்து அவரது கணவரிடம் ஒப்படைத்தார்.