சிதம்பரம் : சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்கம், மிட்டவுன் ரோட்டரி சங்கம், காஸ்மா பாலிடன் லயன்ஸ் சங்கம், டாக்டர் அம்பேத்கர் உடல்நல சேவை இயக்கம், மெக்ட் நிறுவனம் சார்பில் நடந்த விழாவிற்கு தலைமை டாக்டர் சுகுமார் வரவேற்றார். லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் சேதுமாதவன் முன்னிலை வகித்தார். தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்து வெளியிடப்பட்ட மலரை ரோட்டரி மண்டல துணை ஆளுனர் முனைவர் பஞ்சநதம் வெளியிட மிட்டவுன் ரோட்டரி சங்க பொறியாளர் ரவீந்திரன் பெற்றுக் கொண்டார்.
டாக்டர் சிவப்பிகாசம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் முறை, தாய்மார்கள் ஆரோக்கியமாக வாழ்வது குறித்து பேசினார். டெம்பிள் சிட்டி சங்க தலைவர் பாண்டுரங்கன், டாக்டர் கலைச்செல்வி, லஷ்மி, சங்க செயலர்கள் கமல்சந்த் ஜெயின், விஜயகாந்த், ராஜசேகர், வெற்றி வீரமணி, அறிவுக்கரசு, சஞ்சீவி, அகோரமூர்த்தி, நாகராஜன், ரவி, பாரி பங்கேற்றனர்.