/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி வரும் ஸ்டாலினுக்கு வரவேற்பு : ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் முடிவு

ADDED : ஆக 11, 2011 10:58 PM
பண்ருட்டி : நெய்வேலிக்கு வரும் 14ம் தேதி வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பண்ருட்டி ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பண்ருட்டி ஒன்றிய தி.மு.க., செயற்குழு கூட்டம் ரங்கா விடுதியில் நேற்று முன்தினம் நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலர் பலராமன், மாவட்ட கவுன்சிலர் ராஜா, ஒன்றிய துணை செயலர் தென்னரசு, எல்.என்.புரம் ஊராட்சி மன்றத் தலைவர் (பொறுப்பு) துரைராஜ், ஒன்றிய இளைஞரணி ஞானமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் வரும் 14ம் தேதி நெய்வேலி வருகை தரும் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையிலும், ஒன்றிய கழகம் சார்பில் காடாம்புலியூரிலும் சிறப்பான வரவேற்பு அளிப்பது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்கட்சியை பழிவாங்கும் நோக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர், பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்யும் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.