ADDED : ஆக 11, 2011 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் இருந்து லீகோ கல்வி கற்க சென்ற மாணவர்களுக்கு வழியனுப்பு விழா நடந்தது.
விருத்தாசலம் டேனிஷ் மிஷன் தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஏ.எல்.சி., பள்ளி மேம்பாட்டு திட்ட உதவியுடன் காட்டுமயிலூர் பள்ளிக்கு சென்று லீகோ கல்வி கற்கவும், புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டது. அதற்காக பள்ளியில் இருந்து வேன் மூலம் மாணவர்கள் காட்டுமயிலூர் பள்ளிக்கு சென்றனர். மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர் அதிசயராஜன் கொடி அசைத்து மாணவர்களை வழியனுப்பி வைத்தார். ஆசிரியர்கள் மோகன்விக்டர், ரவீந்திரநாதன், துரைராஜ், எஸ்தர்ராணி, ஆஷா உட்பட பலர் உடனிருந்தனர்.