ADDED : நவ 13, 2026 12:22 AM

கடலுார்: மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரான கூடுதல் செயலர் மோகன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
குழந்தைகள் தினத்தையொட்டி நாளை 14ம் தேதி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1,708 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கேக் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுபடாமல் கேக்குகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்யப்பட்டது என்றார்.
ஆய்வின்போது கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பாலகணேஷ், மாநகராட்சி கமிஷனர் கிஷன்குமார், முதன்மை கல்வி அலுவலர் மகாலட்சுமி, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் காண்டிபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
