தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விலையில்லா கறவை மாடுகள் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

விலையில்லா கறவை மாடுகள் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

விலையில்லா கறவை மாடுகள் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : நவ 29, 2026 08:40 PM

ADDED : நவ 29, 2026 08:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 08:40 PM ADDED : நவ 29, 2026 08:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: ஊரக பகுதிகளை சார்ந்த பெண்கள் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக பகுதியில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்யவும், பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் நடப்பாண்டில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கறவை மாடும், அதற்குரிய காப்பீடும் (2 ஆண்டுகளுக்கான), வழங்கப்பட்ட கறவை பசுவை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து, உடனடி தீவன செலவினத்திற்காக 3ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட மகளிர் மற்றும் திருநங்கையர்கள், கறவை பசு வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள், போதுமான அளவு இடவசதி, தீவன வசதி உள்ளோர் பயன்பெறலாம்.

2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி மகளிர், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினர்களை கொண்ட மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டம் பற்றி கால்நடை பராமரிப்புத் துறையின் இணையதளத்தில் (www.ahd.tn.gov.in) அறிந்து கொள்ளலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள மகளிர்கள் tnahschemes.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அடுத்த டிச., 17 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து மேலும் விவரங்களை அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகி பெற்றுகொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us