/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பட்டாசு கடை உரிமம் பெற 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
/
பட்டாசு கடை உரிமம் பெற 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பட்டாசு கடை உரிமம் பெற 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பட்டாசு கடை உரிமம் பெற 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 06, 2025 03:21 AM
கடலுார்: தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
அடுத்த மாதம் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட தாலுகாவில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் நிபந்தனைகள்படி இணையதளம் வழியாக அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக (https://www.tnesevai.tn.gov.in) அரசு இ-சேவை மையங்களில், உரிய ஆவணங்களுடன் உரிமக் கட்டணம் 600 ரூபாய் செலுத்தி பதிவேற்றம் செய்யலாம். இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது எனில் அதற்கான தற்காலிக உரிம ஆணையையும், நிராகரிக்கப்பட்டது எனில் அதற்கான காரணத்தையும் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.