தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாலையில் விழிப்புணர்வு பலகை வைக்க கோரிக்கை

சாலையில் விழிப்புணர்வு பலகை வைக்க கோரிக்கை

சாலையில் விழிப்புணர்வு பலகை வைக்க கோரிக்கை


ADDED : செப் 26, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 04:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு–ஸ்ரீமுஷ்ணம் சாலையில் மழவராயநல்லுா, முடிகண்டநல்லுார், பேரூர் ஆகிய வளைவு பகுதியில் விபத்துக்களை தடுப்பதற்கு விழிப்புணர்வு தகவல் பலகை வைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பிலிருந்து குமாரக்குடி, மழவராயநல்லுார், முடிகண்டநல்லுார், பேரூர், கானுார், சாத்தாவட்டம், நாச்சியார் பேட்டை வழியாக  செல்லும் சாலை 14 கி.மீ., துாரம் உள்ளது.

கிராமங்களிலும், வயல்வெளி பகுதியிலும் செல்லும் இந்த சாலையில் மழவராயநல்லுார், முடிகண்டநல்லுார், பேரூர், சாத்தாவட்டம் ஆகிய பகுதிகளில் வளைவு சாலை செல்கிறது.

இந்த வளைவு சாலையில் எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாமல் வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளாவது தொடர்கதையாகி  வருகிறது.

சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால் கனரக லாரிகள், அரசு பஸ்கள் வரும்போது எதிரே கடக்கும் வாகனங்கள் கடும் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்.

இரவு நேரங்களில் இந்த சாலையில் போதிய லைட் வெளிச்சம் இல்லாததால் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் படுகாயமடைகின்றனர்.

இந்த வளைவு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு வளைவுகளில் எச்சரிக்கையாக செல்வதற்கான விழிப்புணர்வு பலகைகள் ஏதும் வைக்கவில்லை. இதனால் போதிய விழிப்புணர்வு இன்றி இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து ஆபத்தான வளைவு பகுதிகளில் விழிப்புணர்வு தகவல் பலகை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us