/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இலவச தையல் பயிற்சி பெண்களுக்கு அழைப்பு
/
இலவச தையல் பயிற்சி பெண்களுக்கு அழைப்பு
ADDED : அக் 12, 2024 05:45 AM
சிதம்பரம்: ரோட்டரி சங்கம் சார்பில் இலவச தையல் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பயன்பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் ரோட்டரி சங்கம் மற்றும் டாக்டர் சபாநாயகம் நினைவு அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கான 6 மாத கால இலவச தையல் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர விருப்பம் உள்ள பெண்கள் வடக்கு வீதியில் மாருதி தையல் பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு 40 வயதுக்குட் பட்ட 8 முதல் பிளஸ்-2 வரை படித்தவர்கள் வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு 9750918141, 9715874617, 99449 44061 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.